இத்திருக்கோயில் சென்னையில் இருந்து மேற்கு புறமாக சுமார் 53 மைல்கல் தொலைவில், பேரம்பாக்கம்- என்னும்
ஊருக்கு அருகாமையில் அமைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து
தென்மேற்கே 4 கி மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர்.
திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை -
அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ
மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து
சிவன், "தெய்வநாயகேஸ்வரர்' என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால் "அரம்பேஸ்வரர்' என்றும்அழைக்கப்படுகிறார்.
இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் "எலும்பியங்கோட்டூர்' என்று மருவியது. தட்சனால்
சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி
சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

🌸 இறைவர் திருப்பெயர்: அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்.
🌸 இறைவியார் திருப்பெயர்: கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை.
🌸 தல மரம்: வில்வம் , மல்லிகை, பவளமல்லி(பாரிசாதம்)
🌸 தீர்த்தம் : மல்லிகை தீர்த்தம். சந்திர தீர்த்தம்
🌸 வழிபட்டோர்: அரம்பை, சம்பந்தர் - மலையினார் பருப்பதந்.
🌸பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருக்கோயிலின் சிறப்புகள்:
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால்
காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம்,
குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.
தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.
குருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக
தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம்
நீங்கும்.
| Pradosham Dates Month wise - 2021 | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec | |
| 10,26 | 9,24 | 10,26 | 9,24 | 9,24 | 7,22 | 7,21 | 6,20 | 4,18 | 4,18 | 2,16 | 2,16,31 | |
| Sun,Tue | Tue,Wed | Wed,Fri | Fri,Sat | Sun,Mon | Mon,Tue | Wed,Wed | Fri,Fri | Sat,Sat | Mon,Mon | Tue,Tue | Thu,Thu,Fri | |